
”மூதாதையர் உனக்கு -
உனக்கு பெற்று தந்த புண்ணியங்களை-
இன்று ஆகாய விமானம் தட்டிச்
சென்ற ஏக்கமோ.........?
-Rila, Kinniya
*********************
நன்றி..!
”படைத்தவனை நினைத்து
பார்வையை உயா்த்தி
பணிவுடன் நன்றி
செலுத்தும்
பாலைவனக்
கப்பலின்
பண்பு மனிதனுக்கு இல்லையா...?
- Panadura Shakeel
*********************
நண்பனே உசார்..!
”எமக்கடியிலும் பெற்றோல்
இருக்கிறது போல -
அதோ அமெரிக்கன் துரத்தில்
இருக்கிறான்.
- Anvas, Mathurankuli
*********************
ஓ..! ஒட்டகமே...
உன் கழுத்து
நீளம் தான் -
அதட்காக இன்னும்
நீட்டி வைத்து
பார்க்கிறாய்.
சுடு தாங்க முடியவில்லை
என்றா...?
- Fawmiya, Puttalam
*********************
ஏங்குகிறது.....!
சூரியனின் வெப்பம்
குறையாதா?
எனக்கு
அல்ல
என்னில் பயணம்
செய்யும் பாலாய்
போன மக்களுக்காய்....
- Amjath, Akurassa
*********************
நீர்
அற்ற
பாலைவனத்தில்
நீர் வேண்டி
இறைவனை நோக்குகிறாயோ...?
- ZamRiZ, Akurana
*********************
ஒதுங்கி வாழ்கிறாயோ....?
மானிட சூழலில்
மனிதனின் மடமை
அறிந்து - ஒதுங்கி
வாழும் ஒரு உன்னத
படைப்பு
- Zahira
*********************
ஒற்றுமை...
மனிதா...!
பாலைவன வெப்பத்தில்
நடமாடும் ஒட்டகத்துக்கு
இருக்கும் ஒற்றுமை
கூட உனக்கு இல்லையா...?
- Hamaz, Colombo
*********************
உன் கழுத்து...
வான வேடிக்கை
பார்க்கும் ஒட்டகமே....
ஒற்றையடி பாதைக்கும்
பஞ்சம் வந்து
விட்டது...
உன் கழுத்தின்
நீளத்தைப் பார்த்து
- F. Nuha, Madawala
*********************
எதிர்பார்ப்பு
இன்றேனும்
பாலையில்
மழை வருமோ....
என்று பார்க்கிறாயா...??
நிச்சயம் வரும்
உன் போன்ற
உயிருக்கு
உறுதி உடையவன்
அளிப்பான் உயர்-
மழையை..
- Raizana, Mutur
*********************
பாலைவனக்கப்பல்
எனப்படும்
நீ......
பறக்க முடியவில்லை
என்றா........?
வானத்தைப் பார்க்கிறாய்...
- Hafsa Haleel, Puttalam
*********************
இரட்சகனிடம்
மண்டியிடுகின்றாயா...?
ஏன்
இந்த தண்டனை
எனக்கு என எண்ணி............
- Melfha
*********************
பாலைவனத்தில்
ஒரு பசுமையான
கவிதை எழுதச் சொன்னாய்...
ஏற்கனவே அங்கு
எழுதப்பட்டுவிட்டது
"ஒட்டகம்" என்று
Oddamavadi
Naleem Zain
Qatar.
பாலைவனத்தில்
ReplyDeleteஒரு பசுமையான
கவிதை எழுதச் சொன்னாய்...
ஏற்கனவே அங்கு
எழுதப்பட்டுவிட்டது
"ஒட்டகம்" என்று
Oddamavadi
Naleem Zain
Qatar.
உங்களையும் இணைத்துள்ளோம்.. வருகைக்கு நன்றி தோழரே
Delete