From :- An Iniya Illam
பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை.. அது ஏன் என்றும் புரியவில்லை. .(இயற்கையிலே அவங்க அழகாக இருப்பதாலா?)
ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக வெளியுலக தொடர்பு இருக்கு. அவர்கள் தான் வெயில், மழை,தூசியிலும் செல்வார்கள். ஆனால் அவங்க அழகின் மீது அக்கரை காட்டமாட்டாங்க.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை எனபது தான் வருத்தம்
ஆண்களும் அழகுக்குனு நேரம் ஓதுக்கி உடலை பாதுகாத்துக்கொள்ளனும். வீட்டில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் மாதம் ஒரு முறை ப்யூட்டி பார்லர் போகனும்.
வீட்டிலே செய்யும் சில சிம்பிளான அழகு குறிப்புகள் சொல்கிறேன்.. வாரம் ஒரு முறையாவது செய்யுங்கள்..
முக அழகுக்கு:
பொதுவாக ஆண்கள் வேலைநிமித்தமாக அதிகமாக வெயிலில் சுற்றிதிரிவார்கள். வீட்டுக்கு வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் அலசவும். இன்னும் கொஞ்சம் டைமிருந்தால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் கொடுக்கவும். இதனால் முகம் தெளிவடையும். இதனை தினமும் செய்யுங்கள்.
சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும் அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை( மூக்கை மூடிக்கொள்ளவும்) எடுத்து அதில் பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு இளஞ்சூடான வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும். இது மாசம் 2 முறை செய்யவும்.
தினமும் பசும் பாலில் ஏடு எடுத்து முகம் முழுவது நன்கு அழுத்தி தேய்து ஊற வைக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். கருபுள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்.
உதடுக்கு:
சில ஆண்கள் சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும். (தொடர்ந்து சிகெரட் குடிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனில்லை)
பற்களுக்கு:
எலுமிச்சை சாறு + உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.
கூந்தலுக்கு;
தலைமுடி நன்றாக கருகருவென்று வளர்வதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்னெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சமமாக எடுத்து தலைக்கு தேய்த்து ஊரிய பின்பு குளிக்க வேண்டும்
வீட்டில் பெண்களிடம் சொல்லி மருதாணி இலை, கறிவேப்பிலை சிறிது செம்பருத்தி பூ,இதனை காய வைத்து நன்றாக அறைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு தலைக்கு தேய்க்கலாம்.
உணவில் அதிகமாக கீரை, மற்றும் பச்சை காற்கறிகளை அதிகம் சேர்க்கவும்
இளம் நரை வந்தவர்கள் ஷாம்பு போடுவதை தவிற்க்கவும். கூந்தலை ட்ரையாக வைக்க வேண்டாம். சுத்தமான தேங்காய் எண்ணெய் தடவவும்.
முட்டையில் வெள்ளை கருவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்
ஹேர் ட்ரை, ஸ்பிரே, ஜெல், ஹேர் கலரிங், ஸ்பார்கல் போன்றவையினை கூந்தலுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். 22
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். இந்த டிப்ஸ் ஏற்கனவே நான் தமிழ்குடும்பம்.காமில் கொடுத்தது தான்
ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.
நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது
நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக இருக்கும்
சின்ன சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை குர்தா அணிந்தால்,கேஷுவலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.
இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க, பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன். அழகாக இருக்கும்
ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் எல்லோ, போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்லாய் இருக்கும். அவர்களின் நிறத்துக்கு ஏற்றதை போல் தேர்வு செய்யவும்..
உள்ளாடைகள் தேர்வு செய்யும் பொழுதும் அதிக கவனம் தேவை அதிக இருக்கமான உள்ளாடைகள் சிலருக்கு அலர்ஜியினை ஏற்படுத்தும். காட்டன் உள்ளாடைகளை எப்பொழுதும் நல்லது.
கல்லுரிக்கு போகும் ஆனா நீங்கள்
டீசுஷர்ட் போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன். உடைக்குப் பொருத்தமாக ஜீன்ஸ் மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டடால், அசத்தலாக இருக்கும்.
இது போல் ஃபேஷன் என்று காது, கழுத்தில் எலும்புக்கூடு, மண்டை ஓடை, சைக்கள் செயின் போட வேண்டாம். இளம் இரத்தத்துக்கு அழகாக தெரிவது உங்களை பார்க்கும் பெண்களுக்கு பிடிக்காது.
வெளி அழகு 50% உள் அழகு 50% இருக்கனும், அப்பதான் நீங்கள் அழகாக மற்றவர்களுக்கு தெரிவிங்க.
உடலின் அழகை மேலும் மெருகூட்டுவதற்கு மனதை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் நிஜமான புன்னைகை எப்பொழுதும் முகத்தில் இருக்கனும், பிறர் மீது அதிக கோபமோ, பொறாமை படுவது உங்களின் முக அழகை கொடுக்கும்.. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதே அழகிற்கு மூலதனம் என்பதனை மறந்துவிடாதிங்க..