என் தந்தை.... சொல் மிக்க
மந்திரமில்லை
என் தந்தை குணம் சிறக்க
இங்கே யாருமில்லை
தான் கற்றறிந்த ஞானத்தை
பண்புடனே பாரில் எத்தி வைப்பார்
கண்டவர்கள் கதை கேட்டு
முதல் நாள் பள்ளி சென்ற
எனை முத்தமிட்டு அனுப்பி வைத்தார்
ஒவ்வோர் நாளுமெனை
பக்குவமாய் படிக்க வைத்தார்
வாழ்வின் படி நான் தாண்டையிலே
வாழ்த்தியெனை வளர்த்திட்டார்
வண்ண ஆடையையும்
வகை வகை உணவையும்
என் தந்தைவுறவையும்
எனக்காய் தூரம் வைத்தார்
தஹஜ்ஜத்தில் எழுந்தென்னை
பள்ளி செல்ல பழக்கித் தந்தார்
எல்லாத் தேவையையும் தொழுது
கேட்க சொல்லித் தந்தார்
பார்ப்போர் எனை நலதார் பேச
மார் தூக்கி நிமிர்ந்து நின்றார்
அல்லாஹ்வின் பாதையிலே
வீரமிக்க மகனாய் வளர்த்திட்டார்
அவர் மகனாய் எனை அழைக்கும்
பெருமைகளை சுமக்க வைத்தார்
ஈருலகை வென்றிட நான்
வழிகளையும் திறந்து வைத்தார்
நான் கண்ட வழியாய்
எனக்காய் வாழ்ந்திட்டார்..