Blog Updates :
Home » , » அல்குர்ஆன்

அல்குர்ஆன்

Written By Mohamed Imzan on Monday, December 31, 2012 | 3:10 AM





எம். மக்பூன் றியாப்

நம் வீட்டில் தூசுபடியும் 
பள்ளி நூலா இக்குர்ஆன்?
மருந்துக்கு தாயத்து மட்டும் கட்டும் 
மந்திர நூலா இக்குர்ஆன்?
ரமழானில் மட்டும் என மட்டுப்படுத்தி
வந்திறங்கிய நூலா இக்குர்ஆன்?
நான் அறிந்ததை உமக்குறைக்கேன்
இதைக் கொஞ்சம் கேளீர்...

எமை வழிகாட்ட வல்லோன் அளித்திட்ட
அருள் மறை தான் இக்குர்ஆன்
அல்லாஹ்வின் மார்க்கமாம் இவ்விஸ்லாத்தை
பாரினிலே விதைத்திடவே வந்ததுவும் இக்குர்ஆன்
அறியாமை மாந்தர்களை அவ்வுலகில் - அறிவுள்ளோர் 
ஆக்கியதும் இக்குர்ஆன்
கண்மணியாம் பெருமபனை ஹிராவில் வந்தடைந்த 
சுடர் தீபம் தான் இக்குர்ஆன்


மன்னிக்க முடியாத பாவத்தை புரிந்தோரை – பார்போற்றும்
மாந்தர்களாய் வார்த்தெடுத்ததும் இக்குர்ஆன்
பெண்ணினம் தலைதூக்க வழிகாட்டிய 
புண்ணிய வேதம் இக்குர்ஆன்
ஒழுக்கத்தின் உயர்வுதனை எமக்கு கற்பித்த 
ஆசான் தான் இக்குர்ஆன்
பண்பாட்டு விழுமியங்களை பக்குவமாய்
எமக்குறைத்ததும் இக்குர்ஆன்

பெண்ணினம் தலைதூக்க வழிகாட்டிய 
புண்ணிய வேதம் இக்குர்ஆன்
சாவுதான் முடிவென்றிருந்தோரை மருத்துவம்
கொடுத்து உயிர்ப்பித்ததுவும் இக்குர்ஆன்
வானுயர்ந்த கட்டடங்கள் இம்மண்ணில்
தலைதூக்க வித்திட்டதும் இக்குர்ஆன்
வானியலின் எட்டாத எல்லைவரை எமை 
தூக்கிச் சென்றதும் இக்குர்ஆன்

புவியியலின் விளக்கமதை எடுத்து
இயம்பியதும் இக்குர்ஆன்
இயற்கையின் அற்புதத்தை எமக்கு சொல்லி
தந்ததுவும் இக்குர்ஆன்
இருளுக்குள் இருந்த ஐரோப்பாவை
ஒளிபெறச் செய்ததும் இக்குர்ஆன்
எத்துறையிலும்; சாதித்திட வல்லோன் தந்த
மூஸா நபியின் ஆஸாக் கோல் போன்றதுவே இக்குர்ஆன்....

சிறுமி நான் தவறிழைத்தின் எனை
மன்னிக்க மன்றாடுகிறேன்... இல்லை
எம்குர்ஆனை போற்றி நம் வாழ்வில் அதை
எடுத்து நடக்க ஏவுகிறேன்..
வஸ்ஸலாம்

Share this article :
0 Comments
Disqus
Fb Comments
Comments :

0 comments:

 
Support : Creating Website | Zanir Design | Mohamedimzan
Proudly powered by Blogger
Copyright © 2013. Kavi1st - All Rights Reserved
Template Design by Creating Website Published by Zanir Design